கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மறைவு: நயினார் நாகேந்திரன் இரங்கல்

7 hours ago 2

சென்னை,

பழம்பெரும் நடிகர் கோட்டா சீனிவாச ராவ் உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை 4 மணியளவில் காலமானார்.ஐதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் நடிகர் சிரஞ்சீவி, பவன் கல்யாண், பிரகாஷ்ராஜ், குடியரசு முன்னாள் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

இந்திய திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் கோட்டா ஸ்ரீனிவாசராவ். நடிகராக மட்டுமில்லாமல், அரசியல்வாதியாகவும் வெற்றி முத்திரை பதித்தவர். இன்று காலை அவரது மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

தன் தந்தை போல, மருத்துவர் ஆக வேண்டும் என்று கனவு கண்டு, பின்பு நடிப்பின் மீது கொண்ட ஈடுபாட்டால் திரைத்துறையில் அடியெடுத்து வைத்தவர்தான் கோட்டா ஸ்ரீனிவாச ராவ்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என எந்த மொழியில் நடித்தாலும் அந்த மாநிலத்துக்காரராகவே ரசிகர்கள் உணரும் வகையில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்துவதில் வல்லவர்.

நடிகராக மட்டுமின்றி, ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில், நமது பாஜக சார்பில், 1999 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை விஜயவாடா கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்தான் கோட்டா ஸ்ரீனிவாச ராவ். இவருடைய மறைவு, நமக்கு பெரும் இழப்பாகும்!

கோட்டா ஸ்ரீனிவாச ராவ் அவர்களின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்!

அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

ஓம் சாந்தி!. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 

Read Entire Article