குலசை விநாயகர் கோயிலில் மார்கழி பஜனையில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

3 hours ago 2

உடன்குடி, ஜன. 21: குலசேகரன்பட்டினம் உதயமார்த்தாண்ட விநாயகர் கோயிலில் மார்கழி மாதம் தினசரி பஜனை நடந்தது. இதில் கலந்து கொண்ட மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சிவனடியார் இல்லங்குடி தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் வெங்கடாசலம் அனைவருக்கும் பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார். இதில் மீனாட்சிசுந்தரம், சண்முகம், முருகன், சிதம்பரம், தர்மலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியர் சண்முககுமார் நன்றி கூறினார்.

The post குலசை விநாயகர் கோயிலில் மார்கழி பஜனையில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கல் appeared first on Dinakaran.

Read Entire Article