குலசை தசரா பண்டிகை: சிறப்பு பஸ்கள் இயக்கம்

4 months ago 37

சென்னை,

தூத்துக்குடி குலசேகர பட்டினத்தில் நடைபெறும் தசரா பண்டிகையை முன்னிட்டு கூடுதல் பேருந்துகள் இயக்க அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. தசராவை முன்னிட்டு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

குலசேகரப் பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இன்று முதல் தொடங்கிய தசரா திருவிழா 12ம் தேதி வரை நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான மகிஷா சூரசம்காரம் வரும் அக்டோபர் 12ம் தேதி நள்ளிரவு நடைபெறும்.

இந்த தசரா திருவிழாவிற்கு பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். வெகு விமர்சையாக கொண்டாடப்படும் இந்த தசரா திருவிழாவில் லட்சக் கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

குலசேகரபட்டினத்தில் தசரா பண்டிகைக்கு மக்கள் இங்கு செல்ல வசதியாக இன்று முதல் அக்டோபர் 16ம் தேதி வரை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் சிறப்பு பேருந்துகள் இயங்கும்.

அதன்படி, சென்னையில் இருந்து திருச்செந்தூர், குலசேகரப் பட்டிணம், கோவையில் இருந்து திருச்செந்தூர், குலசேகரப் பட்டினத்திற்கும் தினசரி இயக்கப் படும் பேருந்துகளுடன் கூடுதல் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

தசரா பண்டிகை முடிந்து மக்கள் சொந்த ஊர் திரும்ப ஏதுவாக அக்டோபர் 13 முதல் 16 வரை கூடுதல் பேருந்துகள் இயக்கவும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. பயணிகள் www.tnstc.in, tnstc official செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Read Entire Article