‘குற்றவாளிகளுக்கு ஆதரவாக நாராயணசாமி போராட்டம்’ - புதுச்சேரி ஆளுநர், முதல்வரிடம் பேரவைத் தலைவர் புகார்

22 hours ago 1

புதுச்சேரி: கஞ்சா, பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவும், மக்களுக்கு இடையூறாகவும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி போராட்டம் நடத்தியுள்ளதாக புதுச்சேரி ஆளுநர், முதல்வரிடம் பேரவைத் தலைவர் செல்வம் புகார் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி நோணாங்குப்பம் டோல்கேட்டில் மதுபோதையில் 3 பேர் ரகளையில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக சென்ற ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் மாநிலத் தலைவர் அமுதரசன் காவல் நிலையத்துக்கு பஞ்சாயத்து செய்ய சென்றார். அப்போது இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் அவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து புதுச்சேரி - கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் அரியாங்குப்பம் காவல் நிலையம் எதிரே போலீஸாரை கண்டித்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் போராட்டம் நடந்தது.

Read Entire Article