“குறைகூறும் எதிர்க்கட்சிகளுக்கு 2026 தேர்தலில் மக்கள் விடையளிப்பார்கள்” - அமைச்சர் சேகர்பாபு

2 months ago 11

சென்னை: “ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குறைகளை சொல்லத்தான் செய்வார்கள். இதற்கான விடையை 2026 தேர்தலில் மக்கள் தெரிவிப்பார்கள்,” என்று இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

சென்னை மாநகராட்சி திரு.வி.க.நகர் மண்டலம், 74-வது வார்டு புதிய வாழைமாநகரில் ரூ.93.25 கோடியில் புதிதாக இறகுப்பந்து உள் விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டுள்ளது. ஏகாங்கிபுரத்தில் ரூ.40 லட்சத்தில் பல்நோக்குக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இவற்றின் திறப்பு விழா இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் இன்று (நவ.9) நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா பங்கேற்று விளையாட்டு அரங்கையும், பல்நோக்கு கட்டிடத்தையும் திறந்துவைத்தார்.

Read Entire Article