குரானை அவமதித்த வழக்கில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வுக்கு 2 ஆண்டுகள் சிறை

3 days ago 2

சண்டிகர்,

கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் 24-ந்தேதி பஞ்சாப் மாநிலம் மலேர்கோட்டா மாவட்டதில், இஸ்லாமியர்களின் புனித நூலான குரானின் சில பக்கங்கள் கிழக்கப்பட்டு சாலையில் வீசப்பட்ட சம்பவத்தால் இருதரப்பினரிடையே மோதல் வெடித்தது. இந்த மோதல் வன்முறையாக மாறி, வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. நரேஷ் யாதவ் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனிடையே, கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, எம்.எல்.ஏ. நரேஷ் யாதவ் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். இந்த உத்தரவை எதிர்த்து முகமது அஸ்ரப் என்பவர் மலேர்கோட்டா மாவட்ட கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதி பரிமேந்தர் சிங் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. நரேஷ் யாதவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.11,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் அவருடன் கைது செய்யப்பட்ட விஜய் குமார் மற்றும் கவுரவ் குமார் ஆகியோருக்கும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்ட நீதிபதி, நந்த் கிஷோர் என்பவரை வழக்கில் இருந்து விடுதலை செய்து உத்தரவிட்டார்.

Read Entire Article