திருச்செங்கோடு : திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் மலையில் குரங்குகள், சிறு விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது.
மலையில் ஆங்காங்கே உள்ள சுனைகளில் மட்டுமே சற்று தண்ணீர் உள்ளது. மழை பெய்தால் மட்டுமே சுனைகளில் தண்ணீர் போதிய அளவு வரும். கோடை வெயில் சுட்டெரிப்பதால் குரங்குகள், சிறு விலங்குகள் தண்ணீர் இன்றி சிரமப்படுவதை தவிர்க்க, சமூக ஆர்வலர்கள் சிலர் ஒருங்கிணைந்து மலைப்பாதையில் ஆங்காங்கே சிறு தண்ணீர் தொட்டிகளை நிறுவி தினசரி காலை அடிவாரத்தில் இருந்து, டூவீலர்களில் தண்ணீர் கொண்டு சென்று, தொட்டிகளில் ஊற்றி குரங்குகளின் தாகத்தை தணித்து வருகின்றனர்.
கடந்த 50 நாட்களாக இவவாறு தண்ணீர் வழங்கி வருகின்றனர். மேலும் பழங்களை கொண்டு வந்து தினசரி குரங்குகளுக்கு கொடுத்து வருகின்றனர். தன்னார்வலர்களின் இந்த தாகம் தணிக்கும் முயற்சிக்கு பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது. பொதுமக்கள் தாமாக முன்வந்து பழங்களையும், தண்ணீரும் வழங்கி வருகின்றனர்.
The post குரங்குகளின் தாகம் தணிக்க திருமலை தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி appeared first on Dinakaran.