
தெற்கு ரெயில்வே சார்பில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் நடைபெறும்போது புறநகர் மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம்.
அந்த வகையில், சிக்னல் சீரமைப்பு பணிகள் காரணமாக சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி செல்லும் ரெயில்கள் நாளை காலை 9.50 முதல் - மதியம் 3.50 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால் பயணிகளுக்காக குறைந்த அளவில் சென்னை சென்ட்ரல் - பொன்னேரி வரை மட்டும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது