கும்பமேளாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது மிகப்பெரிய விஷயம் அல்ல - பாஜக எம்.பி. ஹேமமாலினி

3 hours ago 2

டெல்லி,

உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் திரிவேணி சங்கமத்தில், கடந்த 29-ந்தேதி மவுனி அமாவாசை அன்று நடந்த புனித நீராடலின்போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 30 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், கும்பமேளாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது தொடர்பாக நடிகையும், பாஜக எம்.பி.யுமான ஹேமமாலினியிடம் நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஹேமமாலி, நாங்கள் கும்ப மேளாவுக்கு சென்றோம். அதே நாளில் நன்றாக புனித நீராடினோம். எல்லா ஏற்பாடுகளும் நன்றாக செய்யப்பட்டு இருந்தன. அங்கு நெரிசல் ஏற்பட்டது மிகப்பெரிய விஷயம் அல்ல. அது மிகைப்படுத்தி காட்டப்படுகிறது' என்றார்.

Read Entire Article