சித்தார்த் நடித்துள்ள புதிய படத்தின் டைட்டில் டீசர் அப்டேட்

2 hours ago 1

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சித்தார்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'மிஸ் யூ'. 7 மைல்ஸ் பெர் செகண்ட் தயாரிப்பு நிறுவனம் சார்பில் என்.ராஜசேகர் இயக்கிய இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

அதனை தொடர்ந்து நடிகர் சித்தார்த் தனது 40-வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ளார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக மீதா ரகுநாத், சைத்ரா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் சரத்குமார் மற்றும் தேவயானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அம்ரித் ராம்நாத் இசையமைக்கிறார்.

இந்நிலையில், சித்தார்த்தின் 40-வது படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தின் டைட்டில் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணியளவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

நாளைக்கு evening 6 மணிக்கு First Look & Title teaser release பண்றோம், பாத்துட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க❤️రేపు evening 6 గంటలకు First Look & Title teaser release చేస్తున్నారు. చూసి ఎలా ఉందో చెప్పండి ❤️#Siddharth40 #Siddharth @realsarathkumar @sri_sriganesh89 #Devayanipic.twitter.com/fN3lUAGqRM

— Shanthi Talkies (@ShanthiTalkies) February 4, 2025
Read Entire Article