அரசு ஆஸ்பத்திரி காவலர் நோயாளிகளிடம் தரக்குறைவாக நடந்தாரா? - தமிழக அரசு விளக்கம்

2 hours ago 1

சென்னை,

'சேலம் அரசு ஆஸ்பத்திரியில் காவலராக பணி அமர்த்தப்பட்டவரின் அராஜகம்' என்று குறிப்பிட்டு காவலர் ஒருவர் நோயாளிகளிடம் மரியாதை குறைவாக பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இது கடுமையான அதிர்வலையையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், 'இது பழைய வீடியோவாகும். கடந்த 2019-ம் ஆண்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியின் பணியில் இருந்த தனியார் நிறுவன காவலர், நோயாளியிடம் தரக்குறைவாக பேசியதற்காக பணி நீக்கம் செய்யப்பட்டார். அப்போது சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோவை தற்போது நடந்த சம்பவம் போன்று பதிவிட்டு தவறாக பரப்பி வருகிறார்கள்' என்று கூறப்பட்டுள்ளது.

Read Entire Article