கும்பமேளா: டெல்லி ரெயில் நிலையத்தில் நெரிசலில் சிக்கி 15 பேர் பலி- பலர் காயம்

3 months ago 11

புதுடெல்லி,

டெல்லி ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. நடைமேடை 13,14,15 -ல் நின்றிருந்த உ.பி செல்லும் ரெயில்களில் ஏற பயணிகள் முண்டியடித்ததால் பயங்கர கூட்டம் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நெரிசலில் சிக்கி 15 பேர் பலியானதாகவும் பலர் காயம் அடைந்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இரவு 10 மணியளவில் இந்த நெரிசல் ஏற்பட்டுள்ளது.

காயம் அடைந்து சிகிச்சை பெற்ற சிலரது நிலமையும் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி ரயில் நிலையத்தில் மீட்பு பணிகளுக்காக தீ அணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர். விடுமுறை தினம் கும்பமேளாவில் பங்கேற்க ஒரே நேரத்தில் அதிக பயணிகள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 29 ஆம் தேதி கும்பமேளாவில் எற்பட நெரிசலில் சிக்கி 30 பேர் பலியான நிலையில் தற்போது டெல்லி ரயில் நிலையத்தில் நெரிசல் ஏற்பட்டுள்ளது

Read Entire Article