கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி லிமிடெட் பெரம்பலூர் கிளை இடமாற்றம்

3 months ago 8

 

கும்பகோணம், பிப்.15: கும்பகோவணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கும்பகோலாம் பரஸ்பர கொய் நிதி லிமிடெட் நிறுவனம் கடந்த 121 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் சேவையை சிறப்பாக செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் பெரம்பலூர் கிளை 14.03.2015 வெள்ளிக்கிழமையன்று என் 18.திருநகர் மெயின் ரோடு, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, டவுன் கிளை எதிரில், பழைய பேருந்து நிலையம் அருகில், பெரம்பலூர் 621 212 கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. நிதியின் தலைவர் கல்யாணசுந்தரம், எம்.பி., விழாவிற்கு தலைமை வகித்தார்.

ஓய்வு பெற்ற கல்வி அலுவவர் ஆர்.ரெங்கசாமி பெரம்பலூர் கிளை அலுவலக புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். அக்கவுண்டன்ட் மற்றும் வரி ஆலோசகர் ஆர்.ரமேஷ் பாதுகாப்பு பெட்டக அறையை திறந்து வைத்தார். நிதியின் மேலமன் இயக்குநர் பி.ஆர்.பி.வேலப்பன், இயக்குநர்கள் ஜி.துரைராஜ் எம்.குருபிரசாந்த் தலைமை பொது மேலாளர் ஆர்.சுபாஷ் பொது மேலாளர் வெங்கடேசன், துணைப் பொது மேலாளர் பி.கருணாநிதி உதவி பொது மேலாளர் பி.முருகேசன். கிளை மேலாளர் ஆர்.பாலகிருஷ்ணன், ஊழியர்கள். பங்குதாரர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

The post கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி லிமிடெட் பெரம்பலூர் கிளை இடமாற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article