லக்னோ,
உத்தரபிரதேசத்தில் நடக்கும் மகா கும்பமேளாவில் கோடிக்கணக்கானவர்கள் புனிதநீராடி வருகிறார்கள். கூட்ட நெரிசலில் பலரும் குடும்பத்தினரை பிரிந்து பின்னர் சேர்ந்த அனுபவம் இருக்கும். அப்படி ஒரு முதியவர் மனைவியை 3 முறை தொலைத்துவிட்டு பின்னர் சேர்ந்திருக்கிறார்.
இதுகுறித்து அந்த முதியவர் நகைச்சுவையாக வெளியிட்ட பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. "முன்பெல்லாம் புனித நீராடலுக்கு சென்று யாராவது தொலைந்து போனால், பத்து, பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் கண்டுபிடிப்பார்கள். ஆனால் நான் மனைவியை 3 முறை தொலைத்துவிட்டேன். இருந்தாலும் ஒவ்வொரு முறையும் அவளை அரை மணி நேரத்திற்குள் போலீசார் அழைத்து வந்துவிட்டனர். ஒவ்வொரு முறையும், நான் எப்படியோ தப்பித்துவிடுவேன் என்று நினைத்தேன்" என்று வேடிக்கையாக குறிப்பிட்டார். வீடியோவை சுமார் 4 லட்சம் பேர் ரசித்து உள்ளனர்.