குமரியில் தனித்தொகுதி கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி தர்ணா

1 month ago 5

பூதப்பாண்டி, நவ.19: பூதப்பாண்டி அருகே உள்ள இறச்சகுளம் சந்திப்பில் குமரி கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியை தனி தொகுதியாக அறிவிக்ககோரி நேற்று காலை தர்ணா போராட்டம் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட செயலாளர் கோபி பேரறிவாளன் தலைமை வகித்தார். தோவாளை ஒன்றிய செயலாளர் ஜான்சுகன் வரவேற்றார். கட்சியின் சட்டமன்ற தொகுதி செயலாளர் சிறுத்தை தாஸ், மாவட்ட அமைப்பாளர் பால்சிங் சேகுவேரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் தர்ணாவை தொடங்கி வைத்தார். இதையடுத்து விசிக மாநில கருத்தியல் பிரிவு செயலாளர் செல்ல பாண்டியன், குமரி மாநகர, மாவட்ட செயலாளர் அல்காலித், மாநில மகளிர் அணி துணை செயலாளர் கலைச்செல்வி உள்ளிட்டோர் பேசினர். சிறப்பு அழைப்பாளராக விசிக மாநில துணை பொதுச்செயலாளர் வன்னியரசு கலந்து கொண்டார். போராட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தை சாமிதோப்பு குரு பால பிரஜாபதி அடிகளார் முடித்து வைத்தார். இதில் விசிக கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

The post குமரியில் தனித்தொகுதி கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி தர்ணா appeared first on Dinakaran.

Read Entire Article