குமரியில் காமராஜர் கல்வெட்டு உடைப்புக்கு காங்கிரஸ் கண்டனம்

3 months ago 6

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்ட அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டம், மாத்தூர் தொட்டிபாலத்தில் அமைந்துள்ள காமராஜர் உருவம் பதித்த கல்வெட்டு மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியிருக்கிறது. இத்தகைய அநாகரீக வன்முறைச்செயலுக்கு காரணமானவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

சமீபகாலமாக அப்பகுதியில் மதவாத சக்திகளின் செயல்பாடுகள் அதிகரித்து வருகிற நிலையில் இச்சம்பவம் நடைபெற்றிருக்கிறது. காமராஜர் கல்வெட்டு சேதப்படுத்தியதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். கல்வெட்டு உடைக்கப்பட்ட இடத்தில் மீண்டும் காமராஜர் சிலையும், கல்வெட்டும் விரைவில் திறக்கப்படும். அதேநேரத்தில் கல்வெட்டை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post குமரியில் காமராஜர் கல்வெட்டு உடைப்புக்கு காங்கிரஸ் கண்டனம் appeared first on Dinakaran.

Read Entire Article