குமரி வள்ளுவர் சிலை வெள்ளி விழா போட்டிகள்: நூலகத்துறை தகவல்

4 weeks ago 6

சென்னை: சென்னை மாநகர நூலக ஆணைக்குழுதலைவர் மனுஷ்யபுத்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: கன்னியாகுமரியில் கடந்த 2000ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி திருவள்ளுவரின் 133 அடி உயர சிலையை முன்னாள் முதல்வர் கலைஞர் நிறுவினார். இத்துடன் 25 ஆண்டுகள் நிறைவானதை அடுத்து வெள்ளிவிழா கொண்டாடப்படுகிறது. இதையடுத்து தமிழ்நாடு அரசு ஆணையின்படி வரும் 23ம் தேதியில் புகைப்படக் கண்காட்சி சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே திறந்து வைக்கிறார். 24 மற்றும் 27, 30ம் தேதிகளில் திருக்குறள் தொடர்பான கருத்தரங்கம் நடக்கும்.

மேலும் 26ம் தேதி காலையில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியும், 28ம் தேதி காலையில் பேச்சுப் போட்டியும், 29ம் தேதி காலை வினாடி வினா நிகழ்ச்சியும் தேவநேயப் பாவாணர் மைய நூலகத்தில் நடக்கும். திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, பேச்சுப் போட்டி மற்றும் வினாடி வினா போட்டிகளில் மாணவர்கள் கலந்து கொள்ளலாம். திருக்குறளில் ஏதேனும் 5 அதிகாரங்களை திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் கலந்து கொள்ளும் பள்ளி மாணவர்கள் பொருளுணர்ந்து உச்சரிப்பு பிழையின்றி ஒப்புவிக்க வேண்டும்.

பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ளும் கல்லூரி மாணவர்கள் மற்றும் வாசகர்கள் நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் என்ற தலைப்பில் 5 நிமிடங்கள் பேச வேண்டும். இதில் கலந்து ெகாள்வோர் தங்களின் பெயரை மாவட்ட மைய நூலகத்தில் நேரிலோ அல்லது 7845221882 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு இம்மாதம் 21ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம். போட்டிகளில் முதல் 3 இடங்களை பெற்று வெற்றி பெறுபவர்களுக்கு முறையே ரொக்கப் பரிசாக ரூ.5 ஆயிரம் ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.

The post குமரி வள்ளுவர் சிலை வெள்ளி விழா போட்டிகள்: நூலகத்துறை தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article