குமரி மாவட்ட தபால்துறை பொதுமக்களுடன் இணைந்து தூய்மை பணி

1 month ago 4

நாகர்கோவில், நவ. 19: அஞ்சலக கன்னியாகுமரி தபால் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. இந்திய தபால் துறை சார்பில், கடந்த செப்டம்பர் மாதம் 17-ந்தேதி முதல் அக்டோபர் மாதம் 31ந் தேதி வரை தூய்மையே சேவை திட்டத்தின் கீழ் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக தபால் துறை சார்பில் நவம்பர் 16 முதல் வருகிற 30-ந்தேதி வரை தபால் துறை ஊழியர்கள், பொதுமக்களுடன் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட உள்ளனர். இதையொட்டி விழிப்புணர்வு நடைபயணம், மரக்கன்றுகள் நடுதல் போன்ற நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளன. பொதுமக்களும் தூய்மை இந்தியா திட்டத்தை கருத்தில் கொண்டு தாங்கள் வசிக்கும் சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க உதவ வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post குமரி மாவட்ட தபால்துறை பொதுமக்களுடன் இணைந்து தூய்மை பணி appeared first on Dinakaran.

Read Entire Article