'குபேரா' படத்தின் முதல் பாடல் அப்டேட் கொடுத்த படக்குழு

1 month ago 6

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ், 'ராயன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து 'இட்லி கடை' படத்தை இயக்கி நடித்து வருகிறார். இப்படம் அக்டோபர் 1-ம் தேதி வெளியாகிறது. மேலும் சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' படத்திலும் நடித்து வருகிறார். ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இப்படம் வருகிற ஜுன் மாதம் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலுக்கான அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, விரைவில் முதல் பாடல் வெளியாகும் என்று தெரிவித்துள்ளது.

Get ready to be amazed #Kuberaa1stSingle loading…#Kuberaa #SekharKammulasKuberaa pic.twitter.com/ZatU3pWay0

— Sree Venkateswara Cinemas LLP (@SVCLLP) April 13, 2025
Read Entire Article