குன்றத்தூரில் வருகின்ற 19ம்தேதி கலைஞர் கைவினை திட்ட துவக்கம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு: திமுக வினருக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் அழைப்பு

2 weeks ago 5

ஆலந்தூர்: சென்னை ஆலந்தூர் தெற்கு பகுதி திமுக அவசர பொது உறுப்பினர்கள் கூட்டம் நங்கநல்லூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அவைத் தலைவர் சுந்தர்ராஜன் தலைமை வகித்தார். பகுதி செயலாளரும் மண்டல குழு தலைவருமான என்.சந்திரன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஜெயராம் மார்த்தாண்டன் தலைமை பொதுக்குழு உறுப்பினர் இப்ராகிம் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோல்டு பிரகாஷ் வரவேற்றார்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு பேசியதாவது;
வரும் 19ம் தேதி குன்றத்தூரில் நடைபெறும் விவசாயிகள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். செங்கல்பட்டில் முதல்வர் பங்கேற்ற ரோடு ஷோவை மிஞ்சும் அளவுக்கு இந்த விழாவில் ஒவ்வொரு வார்டில் இருந்தும் ஏராளமான திமுகவினர் திரண்டு பங்கேற்கவேண்டும். சட்டமன்ற தேர்தல் வர உள்ளதால் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் ஒவ்வொரு சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. அதில் நான் பங்கேற்க உள்ளேன். அப்போது ஆக்க பணிகள் குறித்து விவாதிக்கப்படும்.

இந்த கூட்டத்தில் பகுதி துணை செயலாளர்கள் சாலமோன் ராஜேஸ்வரி, சத்யா பொருளாளர் பாபு, மாவட்ட பிரதிநிதி இ.ரமேஷ் ஜி.ரமேஷ், வெங்கட்ராமன், சி.கந்தன், மாவட்ட அணிகள் சார்பாக சுகுணா கலைவாணன், சீனிவாசன் கலந்துகொண்டனர்.

The post குன்றத்தூரில் வருகின்ற 19ம்தேதி கலைஞர் கைவினை திட்ட துவக்கம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு: திமுக வினருக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் அழைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article