குன்னூர் அருகே சாலையோரங்களில் சிதறிக்கிடக்கும் குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

2 hours ago 2

குன்னூர் : குன்னூர் அருகே சாலையோரங்களில் சிதறிக்கிடக்கும் குப்பைகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மேலூர் ஊராட்சிக்கு உட்பட்ட தூதூர் மட்டம் பகுதியில் சுமார் 300 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. அங்கு சேகரிக்கப்படும் குப்பைகள், அங்குள்ள தூய்மை பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சேகரிக்கப்பட்டு வந்தனர்.

ஆனால் கடந்த சில நாட்களாக தூய்மை பணியாளர்கள் அப்பகுதியில் குப்பை சேகரிக்க வராததால் அங்குள்ள கிராம மக்கள் குப்பைகள் சாலையில் கொட்டி செல்வதாக, வாகன ஓட்டிகள் மத்தியில் புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக அந்த கிராமத்தின் நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த குப்பை தொட்டிகள் முறையாக பராமரிப்பு இல்லாததால் குப்பைத்தொட்டி உடைந்து வீணானது. இதனால் கிராம மக்கள் குப்பைகளை சாலையோரங்களில் கொட்டி செல்வதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் இதை உட்கொள்வதோடு, அங்கு சுற்று திரியும் வளர்ப்பு பிராணிகளும் உட்கொண்டு உயிரிழந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் அப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை முறையாக அகற்றி, அங்கு வைக்கப்பட்டிருக்கும் குப்பை தொட்டிகளை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post குன்னூர் அருகே சாலையோரங்களில் சிதறிக்கிடக்கும் குப்பைகளால் நோய் பரவும் அபாயம் appeared first on Dinakaran.

Read Entire Article