ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம், புதிய மேம்படுத்தப்பட்ட கோடியாக் காரை அறிமுகம் செய்துள்ளது. இதில், 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. 7 ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உள்ளது. இது அதிகபட்சமாக 201 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.
புதிய வடிவமைப்பில் பம்பர்கள், எல்இடி ஹெட்லைட், 18 அங்குல அலாய் வீல்கள்,சி வடிவ எல்இடி டெயில் லை்டடுகள், ரூஃப் ரெயில்கள் என தோற்றப்பொலிவும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
12.9 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 10 அங்குல வண்ண டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே, 3 மண்டல கிளைமேட் கண்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, ஹீட்டிங், வென்டிலேட்டிங் மற்றும் மசாஜ் வசதிகுடன் கூடிய முன்புற சீட்கள், 2 ஸ்போக் ஸ்டீரிங் வீல் என பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. ஸ்போர்ட் லைன் மற்றும் எல் அண்ட் கே என இரண்டு வேரியண்ட்கள் உள்ளன. துவக்க ஷோரூம் ஷோரூம் சுமார் ரூ.46.89 லட்சம்.
The post ஸ்கோடா கோடியாக் appeared first on Dinakaran.