குன்னூர் அருகே உலா வரும் சிறுத்தை: சிசிடிவி காட்சிகள் வெளியானதால் மக்கள் பீதி

4 hours ago 1

நீலகிரி

நீலகிரி மாவட்டம், குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. அந்தவகையில், குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே உள்ள ரேபிஸ் நோய்க்கு மருந்து தயாரிக்கும் இன்ஸ்டியூட் வளாகத்தில் சிறுத்தை ஒன்று நுழைந்துள்ளது.

அங்கு சுற்றி திரியும் சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இணையத்தில் பரவி வருகிறது. மக்கள் வாழும் பகுதியில் சிறுத்தை சுற்றி வருவதால் சிறுத்தையை விரைவாக பிடிக்க அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Read Entire Article