குத்தாலம், பிப்.18: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டாரத்திற்குட்பட்ட வாணாதிராஜபுரம், வில்லியநல்லூர் மற்றும் கொத்தங்குடி ஆகிய ஊராட்சிகளில், மயிலாடுதுறை மாவட்ட கூடுதல் ஆட்சியர் முகமதுசபீர்ஆலம் வளர்ச்சிப் பணிகள் (ம) சுகாதாரப் பணிகள் குறித்து நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.வாணாதிராஜபுரம் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் தூய்மைக்காவலர்களால் வீடு தோறும் சென்று சேகரிக்கப்படும் குப்பைகளைத் தரம் பிரிக்கும் கொட்டகையின் செயல்பாடு குறித்தும், சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக பிரித்து தரம் பிரிக்கப்பட்டு, மயிலாடுதுறை ஒன்றியத்திற்குட்பட்ட அகரகீரங்குடி நெகிழி அரவை அலகிற்கு கொண்டு செல்வது குறித்தும் ஆய்வு செய்தார்.
மேலும், மேற்படி ஊராட்சிகளில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளின் முன்னேற்ற நிலை குறித்தும் ஆய்வு செய்தார். குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலர் சோபனா, குத்தாலம் உதவிப் பொறியாளர் பிரதீஷ்குமார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பணிமேற்பார்வையாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் மற்றும் சுகாதார ஊக்குநர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
The post குத்தாலம் வட்டாரத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் வளர்ச்சிப் பணிகள் appeared first on Dinakaran.