குத்தம்பாக்கம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் இயக்குநர் ஆய்வு

3 weeks ago 6

திருவள்ளூர்: குத்தம்பாக்கம் ஊராட்சி தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் முன் மாதிரி ஊராட்சியாக தேர்வு செய்யப்பட உள்ளது. இதை முன்னிட்டு ஊராட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை பணிகள் மற்றும் பல்வேறு திட்ட பணிகளை ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் இயக்குநர் எஸ்.எஸ்.குமார் திடீரென கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார், செயற்பொறியாளர் ராஜவேல், உதவி செயற்பொறியாளர் சங்கீதா, உதவி திட்ட அலுவலர் மணிவாசகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், ஞானேஸ்வரி, ஊராட்சி மன்ற தலைவர் ராஜசேகரன், துணைத் தலைவர் உஷா நந்தினி வரதராஜ், ஊராட்சி செயலர் முனிவேல் உள்பட பலர் உடனிருந்தனர்.

The post குத்தம்பாக்கம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் இயக்குநர் ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article