திருவள்ளூர், அக். 21: திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி வட்டம், குத்தம்பாக்கத்தில் ரூ.64.13 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட நூலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார். சசிகாந்த் செந்தில் எம்பி, ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் டி.தேசிங்கு, ஒன்றிய துணைத் தலைவர் பரமேஸ்வரி கந்தன், ஒன்றிய கவுன்சிலர் என்.பி.மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலன் துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் ஆகியோர் புதிய நூலக கட்டிடத்தை திறந்து வைத்தனர். இதில் வட்டாட்சியர் ரா.கோவிந்தராஜ், ஊராட்சி ஒன்றிய ஆணையர் க.வெங்கடேசன், திமுக ஒன்றிய செயலாளர்கள் ப.ச.கமலேஷ், சே.பிரேம் ஆனந்த்,
மாநில மாணவரணி இணை செயலாளர் சி.ஜெரால்ட், மாவட்ட துணை செயலாளர் வேப்பம்பட்டு எஸ்.ஜெயபாலன், ஒன்றிய நிர்வாகிகள் கட்டதொட்டி எம்.குணசேகரன், ஜெ.சாக்ரடீஸ், ப.கந்தன், ஜி.சுகுமார், வெள்ளவேடு க.கோபிநாத், பரணிதரன், பிரதீப், பிரவீன்குமார், ஊராட்சி மன்ற தலைவர் கே.எஸ்.ராஜசேகர், துணைத் தலைவர் உஷா நந்தினி வரதராஜ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
The post குத்தம்பாக்கத்தில் ரூ.64.13 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நூலகம்: அமைச்சர்கள் திறந்து வைத்தனர் appeared first on Dinakaran.