மும்பையில் இருந்து கோவை வந்த ஏர் இந்தியா விமானம் மோசமான வானிலை காரணமாக 30 நிமிடம் வானில் வட்டமடிப்பு..!!

2 hours ago 1

கோவை: மும்பையில் இருந்து கோவை வந்த ஏர் இந்தியா விமானம் மோசமான வானிலை காரணமாக 30 நிமிடம் வானில் வட்டமடித்தது. அடர் பனிமூட்டத்தின் காரணமாக கோவை சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க முடியாமல் தவித்து வருகிறது. கோவை சர்வதேச விமான நிலைய பகுதிக்குள்ளாக இன்று காலை அதிகளவில் பனிமூட்டம் இருந்துள்ளது. இதனால் விமான ஓட்டி விமானத்தை இயக்கும் போது கடும் சிரமத்திற்கு உள்ளானார். விமானத்தை ரன்வேயை பார்த்து தரையிறக்க முடியாமல் இருந்துள்ளார்.

முதல் விமானமான இண்டிகோ விமானம் டெல்லியிலிருந்து 232 பயணிகளுடன் வந்துள்ளது. சிறிது நேரம் ரன்வே தென்படாததன் காரணமாக கொச்சிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதன் பின் வந்த ஏர் இந்தியா விமானம் மும்பையிலிருந்து 182 பயணிகளுடன் கோவைக்கு வந்துள்ளது. அந்த விமானமும் ரன்வேயை பார்க்க முடியாமல் தரையிறங்க முடியாமல் கிட்டத்தட்ட 30 நிமிடம் கோவையின் விமான நிலையத்தை சுற்றியே வானில் வட்டமடித்து அதற்கு பின்பாக தரையிறங்கியது. மோசமான வானிலையால் விமானங்களை தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

The post மும்பையில் இருந்து கோவை வந்த ஏர் இந்தியா விமானம் மோசமான வானிலை காரணமாக 30 நிமிடம் வானில் வட்டமடிப்பு..!! appeared first on Dinakaran.

Read Entire Article