வாலாஜாபாத், ஏப்.5: குண்ணவாக்கம் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை சுந்தர் எம்எல்ஏ திறந்துவைத்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நவரைப்பருவ பட்டத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் அறுவடை துவங்கிய நிலையில், மாவட்டம் முழுவதும் விவசாயிகள் நெல் அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நெல் முட்டைகளை விற்பனை செய்ய அரசு நேரடி கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் கிராம பகுதிகளில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து வரும் நிலையில் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட குண்ணவாக்கம் ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது.
இவ்விழாவில், சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்ட் நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார். பின்னர், விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியில், ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், துணைத்தலைவர் சேகர், ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி குப்புசாமி, ஒன்றிய துணைச் செயலாளர் குப்புசாமி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரகு உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post குண்ணவாக்கம் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்: சுந்தர் எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.