பால்வளம், கைத்தறி, சுகாதாரத் துறைக்கு 621 பேர் தேர்வு: நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

8 hours ago 3

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் பால்வளம், கைத்தறி, சுகாதாரத் துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வான 621 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களில், பால்வளத் துறை சார்பில் 64 பேருக்கும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் 166 பேருக்கும், மருத்துவப்பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வான சுகாதாரத் துறையைச் சேர்ந்த 391 பேருக்கும் என மொத்தம் 621 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் அடையாளமாக, 13 பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை தலைமைச்செயலகத்தில், நேற்று வழங்கினார்.

Read Entire Article