புதுடெல்லி: டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனை தொடர்பான வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது.
சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை அமலாக்கத் துறை அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரியும் டாஸ்மாக் அதிகாரிகளை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக்கூடாது என உத்தரவிடக்கோரியும் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.