`குட் பேட் அக்லி' ரிலீஸை ரசிகர்களுடன் கொண்டாடிய 'பீஸ்ட்' பட நடிகர்

1 week ago 1

சென்னை,

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் 'குட் பேட் அக்லி' படத்தில் நடித்து முடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ், யோகி பாபு, பிரியா வாரியர், சிம்ரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், 'குட் பேட் அக்லி' பட வெளியீட்டை ரசிகர்களுடன் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ. இவர் தமிழில் விஜய்யுடன் 'பீஸ்ட்' படத்தில் தீவிரவாதியாக நடித்தார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தில் நடிகராகவும் அரசியல்வாதியாகவும் நடித்திருந்தார். தெலுங்கில் வெளியான 'தசரா' படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர்.

Read Entire Article