
சென்னை,
நடிகை லைலா, விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த 'கள்ளழகர்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, பிதாமகன், நந்தா, உள்ளம் கேட்குமே போன்ற வெற்றிப்படங்களில் நடித்து பிரபலமானார்.
கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'தி கோட்' படத்தில் நடித்த இவர், சமீபத்தில் ஆதி நடிப்பில் வெளியான 'சப்தம்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை லைலா, வித்தியாசமான கதைகளில் நடிக்க ஆர்வமாக உள்ளதாக கூறினார். அவர் கூறுகையில்,
"நெகட்டிவ் கதாபாத்திரங்களை நானே தேர்வு செய்து நடித்தேன். திரில்லர், கிரைம் போன்ற கதையில் நடிக்க நான் ஆர்வமாகவே உள்ளேன். தற்போது 'என்கவுன்ட்டர்' என்ற வெப் தொடரில் நடித்து வருகிறேன். நேரம் இல்லாததால் இன்னும் குட் பேட் அக்லி படத்தை பார்க்கவில்லை" என்றார்.