"குட் பேட் அக்லி" படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடக்கம்...!

1 week ago 8

அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியாக இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் படத்தின் மீதான ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே போகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தில் இருந்து 'ஓஜி சம்பவம்' மற்றும் 'காட் பிளஸ் யூ' பாடல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. அதனை தொடர்ந்து வருகிற ஏப்ரல் மாதம் 3-ந் தேதி குட் பேட் அக்லி படத்தின் டிரெய்லர் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால், குட் பேட் அக்லி படம் சென்சார் சான்றிதழ் பெறுவதற்காக அனுப்பப்பட்டுள்ளது. படம் சென்சார் செய்யப்பட்ட நிலையில், இப்படத்தை பார்த்த சென்சார் குழுவினர் முதல் விமர்சனத்தை கொடுத்துள்ளனர். அதாவது, படம் சிறப்பாக வந்துள்ளதாக கூறியுள்ளனர். பொதுவாக சென்சாரில் உள்ளவர்கள் ஒரு சில படங்களுக்கு மட்டும் தான் இப்படி தங்களது பாராட்டுகளை தெரிவிப்பார்கள். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 'குட் பேட் அக்லி' படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் சுமார் 800 திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Set your reminder for #GoodBadUgly on the @lifeindistrict app ❤ https://t.co/OBvJaEkfbiBe the first ones to be notified when bookings open and also get exclusive offers Grand release worldwide on April 10th, 2025 with VERA LEVEL ENTERTAINMENT #AjithKumarpic.twitter.com/5TGSz6Az7k

— Mythri Movie Makers (@MythriOfficial) April 4, 2025
Read Entire Article