'குட் பேட் அக்லி' படத்தின் படப்பிடிப்பு காட்சி இணையத்தில் கசிவு

3 months ago 26

சென்னை,

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தனது 63-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு 'குட் பேட் அக்லி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகன்ட் லுக் போஸ்ட வெளியாகி வைரலானது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சமீபத்தில் 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் நடிகர் பிரசன்னா நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பை ஐதராபாத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று முடிவடைந்தது.

தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்புகள் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு தளத்தில் அஜித்குமார் நடிக்கும் காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளது. அதில் நடிகர் அஜித் காரில் இருந்து இறங்குவது போல நடிக்கிறார். வழக்கமான தோற்றத்தில் இல்லாமல், புதிய தோற்றத்தில் அதாவது 'டான்' போன்ற தோற்றத்தில் அஜித் காணப்பட்டார். 

Real Don is Back ✅Marana mass look #GoodBadUgly going to be Fireeee #AK#GoodBadUgly pic.twitter.com/fqXUWVyWVQ

— Arthur Morgan (@itssElonmusk) October 7, 2024
Read Entire Article