'குட் பேட் அக்லி' பட தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ்

1 day ago 4

சென்னை,

அஜித்குமார் நடிப்பில் ஏப்ரல் 10-ம் தேதி வெளியான படம் 'குட் பேட் அக்லி'. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் திரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, பிரியா வாரியர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான 'குட் பேட் அக்லி' படம் பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பி வருகிறது. அதன்படி, இப்படம் உலகளவில் 5 நாட்களில் ரூ.160 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், இசையமைப்பாளர் இளையராஜா 'குட் பேட் அக்லி' பட தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதாவது, 'என் ஜோடி மஞ்ச குருவி', 'இளமை இதோ', 'ஒத்த ரூபாயும் தாரேன்' என்ற தன்னுடைய 3 பாடல்களை அனுமதியின்றி 'குட் பேட் அக்லி' படத்தில் பயன்படுத்தியுள்ளதால் ரூ.5 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும், இல்லையென்றால் வழக்கு தொடரப்படும் என மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார் இளையராஜா.

Read Entire Article