"குட் பேட் அக்லி" டைட்டிலே அஜித் சொன்னதுதான் - இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்

1 month ago 5

சென்னை,

அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியாக இன்னும் 24 நாள்களே உள்ள நிலையில் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் டீசர், இதுவரை வெளியான தமிழ் படங்களின் டீசரில் 24 மணி நேரத்தில் அதிக பார்வைகளை கடந்த டீசர் என்ற சாதனையை படைத்தது. இப்படத்தின் 'ஓஜி சம்பவம்' பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இப்பாடலை ஜி.வி. பிரகாஷ் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்து பாடியுள்ளனர்.

இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் இந்த படத்தின் தலைப்பை யார் தேர்வு செய்தது என்பது குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர் பேசியதாவது, " 'குட் பேட் அக்லி' படத்தின் டைட்டிலை அஜித்தான் தேர்வு செய்தார். இத்திரைப்படத்தில் அஜித் குமார் பில்லா மற்றும் தீனா பட கெட்டப்களில் நடித்துள்ளார். இந்த படத்தில் ரெட் டிராகன் என்ற அவருடைய கதாபாத்திரத்தின் பெயர் பயங்கர மாஸாக இருக்கும். அதே சமயம் இந்த படத்தில் எமோஷனல் கனெக்டும் இருக்கும். ஏப்ரலில் அஜித் ரசிகர்களுக்கு விருந்துதான். இந்த படத்தின் ஒவ்வொரு காட்சிகளிலும் அஜித் வரும்போது எப்படி இருக்கும் என்று எங்கள் குழுவினருடன் இணைந்து பேச பேச அடுத்தடுத்த விஷுவல் வந்து கொண்டே இருக்கும். அதை தான் நாங்கள் திரையில் கொண்டுவர முயற்சி செய்திருக்கிறோம். அஜித் குமார் போல் மனஉறுதி கொண்ட நபரை பார்க்கவே முடியாது." என்று கூறியுள்ளார்.

#GoodBadUgly - There's one Dance number for Ajith sir and he danced really well in that song.. Everyday is a FDFS for us..• His Character name was Red dragon in the script but when i said AK, He replied Ok.. And AK sir was on heavy diet.. You cannot see a man like this… pic.twitter.com/OCVPNhUEHu

— Laxmi Kanth (@iammoviebuff007) March 20, 2025
Read Entire Article