'குடும்பஸ்தன்' பட கலை இயக்குனர் சுரேஷ் கல்லேரி காலமானார்

3 hours ago 3

சென்னை,

தமிழ் சினிமாவில் பிரபலமான கலை இயக்குனராக வலம் வந்தவர் சுரேஷ் கல்லேரி (வயது56). இவர் 2008-ம் ஆண்டு வெளியான 'தெனாவட்டு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இவர் 'குட்டிப்புலி, துள்ளி விளையாடு, என்ன சத்தம் இந்த நேரம், வணக்கம்டா மாப்ள, ஜெயில், ராஜ வம்சம், அநீதி, மத்தகம், பிளாக் ரோஸ்' போன்ற படங்களில் கலை இயக்குனராகப் பணிப்புரிந்துள்ளார்.

அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் மணிகண்டனின் குடும்பஸ்தன் படத்தில் கடைசியாக பணியாற்றினார். இந்த நிலையில், நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் வீட்டில் இருக்கும் போது சுரேஷ் கல்லேரிக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவரது மறைவு திரையுலகத்தில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read Entire Article