குடும்ப சண்டையில் தலையிட்ட பக்கத்து வீட்டுக்காரர் கொலை - அதிர்ச்சி சம்பவம்

7 months ago 37

புதுடெல்லி,

வடக்கு டெல்லியில் வசிப்பவர் தீரஜ் (42 வயது). இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. தீரஜ் மனைவியை உடல் ரீதியாக துன்புறுத்தி கொடுமைப்படுத்தி வந்துள்ளார். சம்பவத்தன்றும் தீரஜ் தனது மனைவியுடன் சண்டையிட்டு தாக்கி உள்ளார். அப்போது பக்கத்து வீட்டுக்காரரான ரன்சிங், அவர்களின் சண்டையில் குறுக்கிட்டார். அவர் தீரஜின் நடத்தையை கண்டித்ததாக தெரிகிறது.

இதில் ஆத்திரம் அடைந்த தீரஜ், ரன்சிங்கின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கினார். இதில் ரன்சிங்குக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து ரன்சிங்கை அவரது குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார், தீரஜ் மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Read Entire Article