தெலுங்கு சினிமாவில் புதிய சாதனை படைத்த 'ஹரி ஹர வீர மல்லு' பட டிரெய்லர்

5 hours ago 3

பவர் ஸ்டார் பவன் கல்யாண் அரசியல்வாதியும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும் ஆவார். 'அக்கட அம்மாயி இக்கட அப்பா' என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். பின்னர் இவர் நடித்த படங்கள் தொடர்ச்சியாக பிளாக்பஸ்டர் படங்களாக அமைந்தன.

இவர் தற்போது ஹரி ஹர வீர மல்லு என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். கிரிஷ் மற்றும் ஜோதி கிருஷ்ணா இயக்கி உள்ள இந்த படத்திற்கு கீரவாணி இசை அமைத்திருக்கிறார். இப்படத்தில் நாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழியில் ஒரு பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.

இப்படம் வருகிற ஜூலை 24-ந் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இப்படத்தில் டிரெய்லர் நேற்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், தெலுங்கு சினிமாவில் 'ஹரி ஹர வீர மல்லு' படத்தின் டிரெய்லர் புதிய சாதனை படைத்துள்ள படக்குழு அறிவித்துள்ளது. அதாவது, வெளியான 24 மணிநேரத்தில் யூடியூப் தளத்தில் 48 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. தெலுங்கு சினிமாவில் 24 மணிநேரத்தில் அதிக பார்வைகளை பெற்ற சாதனையை 'ஹரி ஹர வீர மல்லு' படத்தின் டிரெய்லர் படைத்துள்ளது. தற்போது இந்த டிரெய்லர்  யூடியூப் தளத்தில் டிரெண்டிங்கில் முதல் இடத்திலும் உள்ளது.

Yesterday the director said - Ee Saari Date maaradhu - Industry Record lu maaruthayi .And you know exactly what just happened Powerstar @PawanKalyan's #HHVMTrailer is now the with + … pic.twitter.com/asu7njfF4G

— Hari Hara Veera Mallu (@HHVMFilm) July 4, 2025
Read Entire Article