
லண்டன்,
'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான டாமி பால் (அமெரிக்கா), ஆஸ்திரியாவின் செபாஸ்டியன் ஆப்னர் உடன் மோதினார்.
இந்த போட்டியின் முதல் செட்டை 6-1 என்ற புள்ளிக்கணக்கில் டாமி பால் கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற அடுத்தடுத்த செட்களில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய செபாஸ்டியன் ஆப்னர் 7-5, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் டாமி பாலை வீழ்த்தினார்.
அபாரமாக செயல்பட்டு வெற்றி பெற்ற செபாஸ்டியன் ஆப்னர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். அதிர்ச்சி தோல்வி கண்ட அனுபவ வீரரான டாமி பால் தொடரில் இருந்து வெளியேறினார்.