சென்னையை அடுத்த வண்டலூரில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 7 அடி நீள மலைப் பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
குளிர் காலம் என்பதால் பாம்புகள் உஷ்ணமான இடம் தேடி குடியிருப்பு பகுதிக்குள் வர வாய்ப்புள்ளதாக எச்சரிக்கும் தீயணைப்பு வீரர்கள், அவற்ற்க்கு அருகே செல்லாமல் தள்ளி நின்று கண்காணித்தபடி தங்களுக்குத் தகவல் அளிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளில் காணப்படும் இவ்வகை மலைப்பாம்பு இங்கு எப்படி வந்தது என வனத்துறையினர் ஆராய்ந்துவருகின்றனர்.