சென்னை: குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்கள் மற்றும் அமைதி மண்டலம் என்று வரையறை செய்யப்பட்ட இடங்களில் ஹாரன் பயன்படுத்த கூடாது என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஒலியை வெளியிடும் கட்டுமான கருவிகளை இரவு நேரங்களில் அமைதி மண்டலம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் இயக்க கூடாது. ஒலி மாசை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
The post குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்கள் மற்றும் அமைதி மண்டலம் என்று வரையறை செய்யப்பட்ட இடங்களில் ஹாரன் பயன்படுத்த கூடாது: தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.