கிருஷ்ணகிரி, ஜன.25: கிருஷ்ணகிரியில் நாளை(26ம் தேதி) நடைபெறும், குடியரசு தின விழாவில் கலெக்டர் சரயு தேசிய கொடியை ஏற்றுகிறார். கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா நாளை (26ம் தேதி) காலை 8.05 மணிக்கு, கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இந்த விழாவில், மாவட்ட கலெக்டர் சரயு கலந்து கொண்டு, தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். பின்னர், சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதனை தொடர்ந்து, அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களை கலெக்டர் வழங்குகிறார். பின்னர், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
The post குடியரசு தின விழா கொண்டாட்டம் appeared first on Dinakaran.