குடிநீர் கிணற்றில் கொட்டப்பட்ட ஆணுறைகளை அகற்ற வலியுறுத்தல்

15 hours ago 2

ராமநாதபுரம், மார்ச் 21: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே குடிநீர் கிணற்றில் கொட்டப்பட்டுள்ள ஆணுறைகளை அகற்ற வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் செல்லும் வழியில் அம்மா பூங்கா எதிரே சேதுபதி நகர் 1வது தெரு நுழைவாயிலில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் குடிநீர் நீரேற்று நிலையம் உள்ளது. இதன் அருகே குடிநீர் பழைய திறந்த வெளி கிணறு உள்ளது. இந்த குடிநீர் கிணற்றில் மூட்டை மூட்டையாக ஆயிரக்கணக்கான ஆணுறைகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் அந்த தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள இந்த பகுதியில் இவ்வளவு ஆணுறைகள் எங்கிருந்து வந்து கொட்டப்பட்டது. இங்கே கொட்டுவதற்கான அவசியம் என்ன என்று தெரியவில்லை. மக்கள் பயன்படுத்தக் கூடிய குடிநீர் தொட்டி அருகே இவற்றை கொட்டி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே அவற்றை அப்புறப்படுத்தி அந்த குடிநீர் கிணற்றை தூய்மைப்படுத்தி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

The post குடிநீர் கிணற்றில் கொட்டப்பட்ட ஆணுறைகளை அகற்ற வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article