குஜராத்தில் ரூ. 120 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

3 months ago 25

காந்தி நகர்,

குஜராத் மாநிலம் குட்ச் மாவட்டம் காந்திகம் அருகே கடற்கரை பகுதியில் போதைபொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் நேற்று இரவு மாநில போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, 10 பைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 கிலோ கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு 120 கோடி ரூபாய் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், போதைப்பொருளை பதுக்கி வைத்திருந்த கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article