அகமதாபாத் : பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் கல்லூரி மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலத்தில் சமூக வலைத்தளம் மூலம் கல்லூரி மாணவி ஒருவரிடம் இளைஞர் ஒருவர் நண்பராக பழகி வந்துள்ளார். பின்னாளில் அப்பெண்ணை நேரில் சந்தித்த அந்த இளைஞர், அவரை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்துள்ளார். இதனை வைத்து மிரட்டி பல்வேறு இடங்களுக்கு அந்த கல்லூரி மாணவியை வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் தனது நண்பர்களுக்கும் அவரை இரையாக்கி உள்ளார்.
1.5 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பெண்ணை 7 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளது. இது குறித்த அந்த பெண் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ள காவல்துறை, அது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை குற்றவாளிகளில் ஒருவரை கூட குஜராத் காவல்துறை கைது செய்யவில்லை என்றும் விமர்சனம் எழுந்துள்ளது. இதே போன்று கடந்த வாரம் பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தில் 14 வயது தலித் சிறுமி ஒருவர் கொடுமைப்படுத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
The post குஜராத்தில் கல்லூரி மாணவியை 1. 5 ஆண்டாக 7 பேர் கொண்ட கும்பல் மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது அம்பலம்!! appeared first on Dinakaran.