குஜராத்தின் மலேஸ்ரீ ஆற்றில் ஏற்பட்ட திடிர் வெள்ளத்தில் சிக்கிய 26 தமிழர்கள் மீட்பு

2 months ago 20

சென்னை: குஜராத்தின் பாவ்நகருக்கு புனித யாத்திரை சென்ற 26 தமிழர்கள் 26.09.2024 அன்று மலேஸ்ரீ ஆற்றில் ஏற்பட்ட திடிர் வெள்ளத்தில் சிக்கினர். தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறை, குஜராத் மாநில நிருவாகத்துடன் ஒருங்கிணைந்து எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விளைவாக 26 தமிழர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.

12655 நவஜீவன் அதிவிரைவு இரயில் மூலம் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு 01.10.2024 அன்று காலை 05:00 மணியளவில் வந்தடைகின்றனர். சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் அவர்கள், சென்னை வருகை தரும் தமிழர்களை, வரவேற்று அரசின் சார்பில் வாகன வசதிகள் ஏற்பாடு செய்து அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க உள்ளார்கள்.

The post குஜராத்தின் மலேஸ்ரீ ஆற்றில் ஏற்பட்ட திடிர் வெள்ளத்தில் சிக்கிய 26 தமிழர்கள் மீட்பு appeared first on Dinakaran.

Read Entire Article