குஜராத் வெள்ளத்தில் மீட்கப்பட்ட 26 தமிழக பக்தர்கள் அக்.1-ல் சென்னை வருகை

6 months ago 45

சென்னை: தமிழக அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர் பா.கிருஷ்ணமூர்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தைச் சேர்ந்த 26 நபர்கள் குஜராத்தின் பால்நகருக்கு புனித யாத்திரை சென்றுவிட்டு திரும்பும்போது கடந்த 26-ம் தேதி அவர்கள் பயணம் செய்த பேருந்து மலேஸ்ரீ ஆற்று வெள்ளத்தில் சிக்கியது. இச்செய்தி அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு அவர்களை மீட்க உத்தரவிட்டார்.

அதன் விளைவாக, வெள்ளத்தில் சிக்கிய 26 தமிழர்களையும் குஜராத் மாநில நிர்வாகம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி, தங்குமிடம், உணவு வசதிக்கு ஏற்பாடு செய்து அவர்களை பால்நகரில் தங்க வைத்துள்ளனர். மீட்கப்பட்ட 26 தமிழர்களும் ரயில் மூலம் அக்டோபர் 1-ம் தேதி (நாளை மறுநாள்) காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்தடை கின்றனர். அவர்களுக்கு அயலகத் தமிழர் நலத்தறை சார்பில் வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டு அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

Read Entire Article