குஜராத் மாநிலத்தில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவு

4 hours ago 2

காந்திநகர்,

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.44 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவானதாக குஜராத்தின் காந்திநகரை சார்ந்த நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கட்ச் மாவட்டத்தின் லக்பட் நகரத்திற்கு வடக்கு-வடகிழக்கிலிருந்து 76 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எந்தவொரு உயிரி சேதமோ அல்லது பொருள் சேதமோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 7ம் தேதி குஜராத்தின் கச்சு மாவட்டத்தில் 3.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது. அதேபோல, கடந்த 2001 ஜனவரி 26ம் தேதி ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவான நிலநடுக்கத்தில் 13 ஆயிரத்து 800 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article