![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/06/37866817-1.webp)
காந்திநகர்,
குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தின் வைரவ் கிராமத்தில் உள்ள ஒரு பாதாள சாக்கடையில் 2 வயது ஆண் குழந்தை விழுந்ததாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு குழுவினர் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த மீட்புப் பணியில் குறைந்தது 60 -70 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பாதாள சக்கடையின் மூடி கனரக வாகனம் ஒன்றால் சேதமடைந்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 150 மீட்டர் வரை தேடிப்பார்த்தும் குழந்தை இருக்கும் இடம் தெரியவில்லை. தொடர்ந்து குழந்தையை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது என போலீசார் தெரிவித்துள்ளனர்.